ரஜினி பேரன் பெயரில் சினேகா படம் குத்து
விளக்காக இருந்த சினேகா இப்போ குங்ஃபூ சினேகாவா மாறிட்டார். ‘பவானி’
படத்தில் IPS அதிகாரியாக நடிப்பவர், அதற்காக மெனக்கெட்ட விஷயங்கள்
ஹீரோக்களுக்கு சமமானது. எடைகுறைத்து, பைட்டெல்லாம் கற்றுக்கொண்டு அசல் போலீஸ் அதிகாரி போன்ற ரியாக்ஷன் கொடுத்துள்ளாராம். சினேகா எத்தனை இடத்தில் புன்னகைக்கிறார் என மற்ற படங்களில் போட்டி வைத்தால் ‘பவானி’யில் சினேகா சிரிக்கும் இடத்தை சொல்பவர்களுக்கு சிறப்பு பரிசு என போட்டி வைக்கலாமாம். அந்த அளவிற்கு ‘பவானி’யில் சிரிக்காத சினேகாவாக மாறியுள்ளாராம். தனக்கு மட்டுமே முக்கியத்துவம் உள்ள ‘பவானி’யை தொடர்ந்து அதேபோன்ற கதைகளிலேயே சினேகாவின் ஆர்வம் இருக்கிறது. அடுத்து சினேகா ஒப்பந்தமாகியுள்ள படம் ‘யாத்ரா’. (ரஜினி பேரன் பெயர் இதுதாங்கோ) இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையாம். அமீர், சுப்ரமணியசிவா ஆகியோரிடம் உதவி இயக்குனராக இருந்த R.R.விஜய் ‘யாத்ரா’வை இயக்குகிறாராம். இதுலயாவது சிரிக்கிற சினேகாவை பார்க்கலாமா பிரதர்!? | ||||
படுக்கையறை காட்சியில் அனுயா
| ||||
மாப்பிள்ளை’ ரீமேக்கில் தனுஷ் மாமனார் ரஜினிக்காக சுட்ட கதையை சுடுவதில் மருமகன் தனுஷிற்கு ஆர்வம் அதிகமாகிவிட்டது. ‘படிக்காதவன்’ படத்தை தொடர்ந்து சுராஜ் - தனுஷ் மீண்டும் இணைகின்றனர். கதைக்காக
புதுசா ரூம் போட்டெல்லாம் யோசிக்காமல் ரஜினி நடித்த ‘மாப்பிள்ளை’யையே
‘சுடலாம்’என முடிவெடுத்துள்ளனர். மாமியாருக்கும் மருமகனுக்கும் இடையே
நடக்கும் சவால் ரேஸ்தான் மாப்பிள்ளையின் கதை. ஒரிஜினல் மாப்பிள்ளையில்
ரஜினி நடித்த கேரக்டரில்தான் தனுஷ் நடிக்கிறார். பழைய
கதை என்றாலும் காமெடி, ஆக்ஷனில் புதிய மசாலாக்களை சேர்க்கவுள்ளாராம்
இயக்குனர் சுராஜ். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்க
முடிவுசெய்யப்பட்டுள்ளது. ‘பொக்கிஷம்’, ‘நான் அவனில்லை 2’ ஆகிய படங்களை
தயாரித்து வரும் இதேஷ் ஜெபக் புதிய ‘ மாப்பிள்ளையை’ தயாரிக்கிறாராம். அமலா
நடித்த கதாபாத்திரத்தில் நயன்தாரா,அனுஷ்கா இருவரில் ஒருவரை தனக்கு ஜோடி
போட வையுங்கள் என இயக்குனர் சுராஜுக்கு அன்புகட்டளை போட்டிருக்காராம்
தனுஷ். | ||||
சூர்யா - முருகதாஸ் மீண்டும் இணைகிறார்கள் ஏ.ஆர்.முருகதாஸ் யார் யாருக்கோ கதை சொல்லி கடைசியில் சூர்யாவுக்கு அமைந்ததுதான் 'கஜினி'. இயக்குனர், ஹீரோ இருவரையுமே இன்னொரு தளத்திற்கு உயர்த்திச் சென்றது அந்தப் படம்தான். இந்தியிலும்
வெற்றிக்கனியை பறித்து வந்த ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க முன்னணி
நாயகர்களிடையே பேராசை வளரும் அளவிற்கு முருகதாஸின் தரம் சர்வதேச அளவிற்கு
உயர்ந்துள்ளது. அடுத்து அஜித்தை இயக்கப்போகிறார், ரஜினியை இயக்கப்போகிறார்
என உறுதி செய்யாத தகவல்கள் வந்து கொண்டிருந்த நிலையில் முருகதாஸின் அடுத்த
படத்தின் நாயகன் சூர்யாதான் என முடிவாகியுள்ளது. கஜினிக்கு பிறகு முருகதாஸ்-சூர்யா இணையும் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கவுள்ளது. கே.எஸ்.ரவிக்குமார்
இயக்கத்தில் 'ஆதவன்' படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் சூர்யா அடுத்ததாக
ஹரி இயக்கும் 'சிங்கம்' படத்திற்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். இந்த படங்கள்
முடிந்ததும் முருகதாஸ் படத்தில் நடிக்கும் சூர்யா, அதே நேரத்தில் கால்ஷீட்
அட்ஜஸ்ட் செய்து ராம்கோபால் வர்மா படத்திலும் நடிப்பாராம். தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகும் அப்படத்தில் சூர்யா ஜோடியாக நடிப்பது யாரென்பது இன்னும் முடிவாகவில்லை. | ||||
காதலை முறியடித்து பெற்றோர் மாப்பிள்ளை பார்க்கிறார்கள் - சிக்கலில் நயன்தாரா நயன்தாராவின்
காதல் விவகாரம் அவரது பெற்றோரை கடுமையாக சங்கடப்படுத்தியுள்ளது. பிரபுதேவா
திருமணமானவர், குழந்தைகளுக்கு தந்தை, காதலை முறித்துவிடு என்றெல்லாம்
மகளிடம் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் நயன்தாராவோ காதல் இல்லை,
நட்பாகத்தான் பழகி வருகிறோம் என்று கூறி வருகிறாராம். இந்த நிலையில்
துபாயில் இருவரும் சேர்ந்து ஷாப்பிங் போனதாக வெளியான தகவல் பெற்றோரை
மேலும் கவலையடையச் செய்துள்ளது. நயன்தாராவின் நடவடிக்கைகளை கண்காணிக்க
தொடங்கியுள்ளனர். முன்பெல்லாம் படப்பிடிப்புக்கு தனியாகவே சென்று வந்தார். இப்போது தாய், தந்தை மாறி, மாறி உடன் செல்கிறார்கள். படப்பிடிப்பு முடியும் வரை அருகிலேயே இருக்கிறார்கள். செல்போனையும் தங்கள் வசம் வாங்கி வைத்துள்ளனர். அடுத்தக்கட்டமாக நயன்தாராவுக்கு மாப்பிள்ளை தேடும் படலத்தையும் துவக்கியுள்ளனர். உள்ளூர் மற்றும் வெளிநாடு வரன்கள், போட்டோக்கள், ஜாதகங்களை வாங்கி பொருத்தம் பார்த்து வருகிறார்கள். விரைவில் நயன்தாரா திருமணத்தை முடித்துவிட வரிந்து கட்டி இறங்கி இருக்கிறார்கள். இதனால் நயன்தாராவுக்கு புதுசிக்கல் ஏற்பட்டுள்ளது. பிரபுதேவாவை மணந்தால் முதல் மனைவி மூலம் சட்ட சிக்கல் ஏற்படும். அதேவேளையில் பெற்றோர் மாப்பிள்ளை பார்ப்பதில் அவசரம் காட்டுவதையும் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. எனவே தவிப்பில் உள்ளார் நயன்தாரா. | ||||
விஜய்யை சூழந்த ரசிகர்கள்; படப்பிடிப்பில் பரபரப்பு!
|