பிலிம்பேர் விருது: சூர்யா சிறந்த நடிகர் - சசிக்குமார் சிறந்த இயக்குநர்
|
2009-08-03, 9:36 Pm |
சுப்பிரமணியபுரம்
படத்தை இயக்கியதற்காக சசிகுமாருக்கு சிறந்த இயக்குநர் விருது
கிடைத்துள்ளது. இந்தப் படத்துக்கு சிறந்த படத்துக்கான விருதும், சிறந்த
பின்னணிப் பாடகிக்கான விருதும் கூட கிடைத்துள்ளது.
நடிகர் சூர்யா சிறந்த நடிகராகவும்,பூ பட நாயகி பார்வதிக்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது. பிராந்திய மொழித் திரைப்படங்களுக்கான 56வது பிலிம்பேர் விருது வழங்கும் விழா நேற்று ஹைதராபாதில் நடந்தது. ஹாரிஸ் ஜெயராஜுக்கு குஷ்புவும், சிறந்த படத்துக்கான விருதினை சசிக்குமாரிடம் ரீமா சென், தேவிஸ்ரீ பிரசாத்தும், சூரியாவுக்கான விருதினை தபுவும், சசிக்குமாருக்கான விருதினை இலியானாவும், பார்வதிக்கான விருதினை ஜோதிகாவும் வழங்கினர். இந்த விழாவில் தமிழில் விருது பெற்றோர் விபரம்: சிறந்த படம்: சுப்பிரமணியபுரம் சிறந்த இயக்குநர்: சசிகுமார் (சுப்பிரமணியபுரம்) சிறந்த நடிகர்: சூர்யா (வாரணம் ஆயிரம்) சிறந்த நடிகை: பார்வதி (பூ) சிறந்த துணை நடிகை: சிம்ரன் (வாரணம் ஆயிரம்) சிறந்த துணை நடிகர்: அஜ்மல் (அஞ்சாதே) சிறந்த இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ் (வாரணம் ஆயிரம்) சிறந்த பாடகர்: நரேஷ் (வாரணம் ஆயிரம்) சிறந்த பாடகி: தீபா மரியம் (சுப்பிரமணியபுரம்) சிறந்த பாடலாசிரியர்: தாமரை (வாரணம் ஆயிரம்) சிறந்த அறிமுக நாயகன்: சாந்தனு (சக்கரகட்டி) வெட்டூரி சுந்தரராம மூர்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. |