வாமனன்
![]() |
![]() ஜெய் நடிக்க வாய்ப்பு கேட்டு போகும் இடங்கள் வாய்ப்பு தேடுகிறவர்களுக்கு பாடசாலை. திட்டு வாங்கிக் கொண்டு அதை சமாளிக்கும் இடத்தில் ஜெய் ' 'ஜெய்'க்கிறார். ப்ரியாவை பார்த்ததும் காதல்
வருவதும், மோதலில் தொடங்கும் காதல் பிறகு கூடலில் முடிவதும் பழம் பஞ்சாங்க
எபிசோட். ப்ரியாவின் அம்மா ஊர்வசியை சமையல் நிகழ்ச்சிக்காக படப்பிடிப்பு
நடத்துவதாக கூறி ஜெய்யும், சந்தானமும் கலாய்க்கும் இடத்தில் வயிறு
புண்ணாகிறது. ஊர்வசியின் நடிப்புக்கு நகைச்சுவை மாமணி பட்டமே தரலாம். ![]() வாய்ப்பு
தேடும் இளைஞனாக யதார்த்தத்தை மீறாமல் நடித்திருக்கிறார் ஜெய்.
ப்ரியாவுக்கு அதிக வேலையில்லை. கவர்ச்சியுடன் முடிந்து போகிறது
லட்சுமிராயின் அத்தியாயம். ஆச்சரியம் என்றால் அது சந்தானம். இரட்டை
அர்த்த வசனம் இல்லாமலே காமெடியில் கலக்குகிறார். அரசியல்
சண்டையில் டெல்லி கணேஷை தீர்த்து கட்டும் சம்பத், அவருக்கு உதவி செய்யும்
போலீஸ் அதிகாரி தலைவாசல் விஜய், எதிர்பாராத வில்லன் ரகுமான் என அனைவரும்
சிறப்பாக நடித்துள்ளனர். ![]() தமிழ்ப்பட
கிளைமாக்சில் வரும் கட்டி முடிக்கப்படாத பில்டிங்கில்தான் இந்தப் படத்தின்
கிளைமாக்சும். ரகுமானும்., ஜெய்யும் மோதும் காட்சியை ஆக்ரோஷத்துடன் எடுத்த
அதே நேரம் புத்திசாலித்தனமாக மோதலை முடித்ததற்கு இயக்குனரை பாராட்டலாம். யுவனின்
இசை படத்தின் ப்ளஸ். அதிலும் ஏதோ செய்கிறாய் பாடல் தாலாட்டுகிறது.
படத்தின் குவாலிட்டியை உயர்த்தியிருக்கிறது அரவிந்த் கிருஷ்ணாவின்
ஒளிப்பதிவு. பழக்கமான கதையை ரசிக்கும்படி தந்திருக்கிறார்கள். ஒருமுறை
பார்க்கலாம். |