Saturday, 2024-04-20, 6:30 AM
My site
Welcome Guest | RSS
Main | வாமனன் | Registration | Login
Site menu

Section categories

உலக அதிசங்கள்

வாமனன்

சுப்பிரமணியபுரம் வெற்றிக்குப் பிறகு ஜெய் நடித்திருக்கும் படம். சூப்பர் ஹீரோவாக பன்ச் டயலாக் பேசி எதி‌ரிகளையும், நம்மையும் வதம் பண்ணாமல் யதார்த்தமாக வந்து போவதற்கு முதலில் சபாஷ்.
இரண்டு டிராக்காக பயணிக்கிறது கதை. ஜெய்க்கு சினிமாவில் ஹீரோவாகும் ஆசை. ஊ‌ரிலிருந்து கிளம்பி வந்து நண்பன் சந்தானத்தின் அறையில் தங்கி சென்னையில் வாய்ப்பு தேடுகிறார். ஊ‌ரிலிருந்து கிளம்பி வரும் ஹீரோவுக்கு அடைக்கலம் கொடுப்பதற்காகவே சென்னையில் ஒரு காமெடி நண்பர் இருப்பது இந்தப் படத்திலும் ‌ரிப்பீட்.

ஜெய் நடிக்க வாய்ப்பு கேட்டு போகும் இடங்கள் வாய்ப்பு தேடுகிறவர்களுக்கு பாடசாலை. திட்டு வாங்கிக் கொண்டு அதை சமாளிக்கும் இடத்தில் ஜெய் ' 'ஜெய்'க்கிறார்.

ப்‌ரியாவை பார்த்ததும் காதல் வருவதும், மோதலில் தொடங்கும் காதல் பிறகு கூடலில் முடிவதும் பழம் பஞ்சாங்க எபிசோட். ப்‌ரியாவின் அம்மா ஊர்வசியை சமையல் நிகழ்ச்சிக்காக படப்பிடிப்பு நடத்துவதாக கூறி ஜெய்யும், சந்தானமும் கலாய்க்கும் இடத்தில் வயிறு புண்ணாகிறது. ஊர்வசியின் நடிப்புக்கு நகைச்சுவை மாமணி பட்டமே தரலாம்.

காதலும் கலாட்டாவுமாக செல்லும் கதையில் க்ரைமை சேர்க்கிறது லட்சுமிராயின் மரணம். மாடலாக வந்து சொற்ப நேரத்திலேயே உயிரை விடுகிறார் லட்சுமிராய். அவரது கொலைப்பழி ஜெய் மீது விழ, பரமபத ஆட்டம் தொடங்குகிறது.

வாய்ப்பு தேடும் இளைஞனாக யதார்த்தத்தை மீறாமல் நடித்திருக்கிறார் ஜெய். ப்‌ரியாவுக்கு அதிக வேலையில்லை. கவர்ச்சியுடன் முடிந்து போகிறது லட்சுமிராயின் அத்தியாயம். ஆச்ச‌ரியம் என்றால் அது சந்தானம். இரட்டை அர்த்த வசனம் இல்லாமலே காமெடியில் கலக்குகிறார்.

அரசியல் சண்டையில் டெல்லி கணேஷை தீர்த்து கட்டும் சம்பத், அவருக்கு உதவி செய்யும் போலீஸ் அதிகா‌ரி தலைவாசல் விஜய், எதிர்பாராத வில்லன் ரகுமான் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

போலீசிடமிருந்து தப்பித்து ரகுமானிடம் அடைக்கலமாகும் ஜெய்யிடம், நான்தான் லட்சுமிராயை கொலை செய்தேன் என ரகுமான் கூறும்போது சூடு பிடிக்கிறது திரைக்கதை.

தமிழ்ப்பட கிளைமாக்சில் வரும் கட்டி முடிக்கப்படாத பில்டிங்கில்தான் இந்தப் படத்தின் கிளைமாக்சும். ரகுமானும்., ஜெய்யும் மோதும் காட்சியை ஆக்ரோஷத்துடன் எடுத்த அதே நேரம் புத்திசாலித்தனமாக மோதலை முடித்ததற்கு இயக்குனரை பாராட்டலாம்.

யுவனின் இசை படத்தின் ப்ளஸ். அதிலும் ஏதோ செய்கிறாய் பாடல் தாலாட்டுகிறது. படத்தின் குவாலிட்டியை உயர்த்தியிருக்கிறது அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு. பழக்கமான கதையை ரசிக்கும்படி தந்திருக்கிறார்கள். ஒருமுறை பார்க்கலாம்.

Tag Board

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

Copyright MyCorp © 2024 Site managed by uCoz