Tuesday, 2024-04-23, 12:21 PM
My site
Welcome Guest | RSS
Main | எயிட்ஸ் வைரஸின் பரம்பரை ரகசியங்கள் வெளிப்பட்டன. | Registration | Login
Site menu

Section categories

உலக அதிசங்கள்

எயிட்ஸ் வைரஸின் பரம்பரை ரகசியங்கள் வெளிப்பட்டன.
  உலகில் மனித குலத்தை ஆட்டிப்படைத்து வரும் எயிட்ஸ் நோlankasri.comய்க்குரிய எச் ஐ வி -1 (HIV -1)(Human immunodeficiency virus) இன் பரம்பரை அலகுகளின் தொகுப்பு (genome) அமெரிக்க வடக்கு கரோலினா பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டு வெளிக் கொணரப்பட்டுள்ளது.

இதன் மூலம் விளங்கக் கடுமையாக உள்ள எச் ஐ வியின் செயற்பாடுகள், மாறல்கள் மற்றும் அதன் பெருக்கங்கள் தொடர்பான பரம்பரை அலகுகள் சம்பந்தப்பட்ட விடயங்கள் தெளிவாக விளங்கிக் கொள்ளப்பட்ட முடியும் என்றும் அதன் மூலம் எச் ஐ வியைக் கட்டுப்படுத்தும் மருந்துகளின் தயாரிப்பை மேலும் வினைத்திறனுடைய வகையில் வலுப்படுத்த முடியும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

எளிமையான மற்றைய வைரஸ்களின் ஜினோம்களோடு ஒப்பிடும் போது எச் ஐ வி- 1 சிக்கலான ஜினோம் தொகுப்பைக் கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்து கூறியுள்ளனர்.

எச் ஐ வி - 1 டி என் ஏ (DNA) இரட்டைச் சங்கிலி அமைப்பில் பரம்பரைத் தகவல்களைச் சேர்த்து வைக்கும் வைரஸ் அல்ல. அது ஆர் என் ஏ (RNA) எனப்படும் ஒற்றைச் சங்கிலி அமைப்பில் தகவல்களை சேகரித்து வைப்பதால் அதன் பரம்பரை அலகுகளின் தொடர்ச்சியை ஆராய்ந்து வெளிப்படுத்துவது என்பது சிக்கலானதாக இருந்து வந்தமை இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.


Tag Board

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

Copyright MyCorp © 2024 Site managed by uCoz