முத்திரை
எ ஸ்டோரி ஆஃப் கேப் மாறிகள்! அரைஞான் கயிறு இருக்க வேண்டிய இடத்தில் தாலி. |
அதை
மறைத்துக் கொண்டு லட்சுமிராய் கேபரே ஆடியிருக்கிறார் என்பது போன்ற
'நுணுக்கமான' திங்க்கிங்ஸ்தான் இந்த படத்திற்கு பேக்கிங்க்ஸ்! ஜீவா என்ற
கவித்துவமான கலைஞனின் பேனரிலிருந்து வந்திருக்கும், கச்சா முச்சா சினிமா
இது என்பதால், கட்டை விரலில் 'கல்' தட்டுகிறது. மற்றபடி, முத்திரையை
மேம்போக்காக குத்தாமல் கொஞ்சம் அழுத்தமாகவே குத்தியிருக்கிறார் புதுமுக
இயக்குனர் ஸ்ரீநாத். வெளிநாட்டினர் ஆடும் டிஸ்கோத்தேக்களுக்கு
போவதும், அவர்களிடமிருந்து பாஸ்போர்ட்டுகளை திருடி பல்க்காக விற்பதும்
டேனியல் பாலாஜிக்கு தொழில். அசந்தால் பின்புற பாக்கெட்டிலிருந்து பர்சுகளை
திருடி பிழைப்பது நிதின் சத்யாவின் தொழில். ஒரு திருடனோட மனசு இன்னொரு
திருடனுக்குதான் தெரியுங்கிற மாதிரி, திக் பிரண்ட்ஸ் ஆகிறார்கள் இருவரும்.
பாம்பு பொந்திலே கையை விட்ட கதையாக போலீஸ் கமிஷனர் கிஷோரோடு
பிரச்சனையை வளர்த்துக் கொள்கிறார்கள் இருவரும். அவர் விரட்ட தப்பித்து
ஓடுகிற இந்த கேப் மாறிகளோடு தற்செயலாக சிக்கிக் கொள்கிறார்கள் காதலிகளான
லட்சுமிராயும், மஞ்சரியும். பிரச்சனையில் இருந்து இவர்கள் அத்தனை பேரும்
தப்பிப்பதுதான் க்ளைமாக்ஸ். டேனியல்
பாலாஜியின் முகப் பொலிவுக்கு(?) ஏற்ற கேரக்டர். குளோஸ் அப்
வைத்துவிடுவார்களோ என்ற அச்சத்தை தருகிறார் அவ்வப்போது. காதல் காட்சிகளில்
கூட, கறிக்கடை பாய் மாதிரி அப்படி ஒரு கொடூரம். லேப்-டாப் கையில்
கிடைத்ததும் அசால்டாக கமிஷனரிடம் பேசுவதும், துணை முதல்வரை மிரட்டுவதுமாக
ஒரே அலட்டல். காதுல பூ என்றாலும், சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. அந்த மழை
ஃபைட் சூப்பர் சாரே... நிதின் சத்யா, தன்னை ஒரு சி.பி.ஐ ஆபிசர்
என்று சொல்வதை ஒரு கல்லு£ரி மாணவி அப்படியே நம்பி... ஹ¨ம், என்னத்தை
சொல்றது? (படத்திலேயே இவன் சொன்னா நம்பிடுவியா? என்று டயலாக்
எழுதியவருக்கு முத்திரை மோதிரம் போடலாம்) மற்றபடி நிதினிடம் நம்ம
கார்த்திக்கோட குறும்பு கொப்பளிக்கிறது. அளவு தெரியாமல்
தைக்கப்பட்ட அரைகுறை ஆடையோடு, அளக்கவே சரக்கில்லாமல் நடிக்கிறார்கள்
லட்சுமிராயும், மஞ்சரியும். போகட்டும்... ரசிகனுக்கு அதெல்லாமா தேவை? முதலமைச்சர்
நாற்காலிக்கு ஆசைப்படும் பொன்வண்ணன் செய்கிற கொலை ஒன்றின் ஆதாரத்தை லேப்
டாப்பில் சேகரித்தபடி திரியும் சேத்தன் மட்டும் கொஞ்சம் சேத்திக்
கொள்ளலாம்ங்கிற அளவுக்கு நடித்திருக்கிறார். படத்தின் சின்ன சின்ன
சுவாரஸ்யங்களில் இந்த சஸ்பென்சும் ஒன்று என்பது ஆறுதல். ஆனால், லோக்கல்
பிக் பாக்கெட்டுகள், ஒரு போலீஸ் கமிஷனரையே பேத்தலாக்க பார்ப்பது
தமிழ்சினிமாவில் பழக்கமான வழக்கம்தானே? யாரை வேணும்னாலும் ஹீரோவாக்கலாம் என்ற இயக்குனரின் துணிச்சல், தயாரிப்பாளருக்கு அர்ப் 'பணம்' ஆனால் சரி. |