வெடிகுண்டு முருகேசன்
சிரிப்பு திருடன் சிங்காரவேலுவை கார்டூனாக பார்த்து கலகலப்புற்ற மக்களுக்கு, “...ந்தா பாருங்க” என்று நிஜமாக கொண்டு வந்து நேரில் நிறுத்தியிருக்கிறார் டைரக்டர் மூர்த்தி. |
வழக்கை
பொறுத்தவரை செவன்ட்டி ஃபைவ்வா இருக்கலாம். ஆனால் ரசிகர்களை அசத்துற
விஷயத்திலே 307, 309 என்று எக்கச்சக்க மார்க் வாங்கியிருக்கிறார் பசுபதி.
இன்னா ஒரு நக்கலு, இன்னா ஒரு நையாண்டி...!
இவருக்கும் லோக்கல் போலீஸ் ஜோதிர்மயிக்கும் காதல். லாக்கப்புல
போட்டோமா? போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளேயே காதலை வளர்த்தோமா என்று போகிற
லவ்வுக்கு நடுவிலே, வேறொரு பிரச்சனையில் சிக்குறார் பசுபதி. இவரை
காப்பாற்றுவதற்காகவே ஒரு வருஷம் ஜெயில்லே தள்றாங்க ஜட்ஜம்மா. (அட,
அவங்களும் பசுபதி பக்கம்தான்பா...) ஜெயிலுக்கு போனாலும், போட்டுத்தள்ள
உள்ளேயே வருது வில்லன் கோஷ்டி. அந்த நேரம் பார்த்து ஜெயிலில் இருந்து
பெயிலில் வர்றாரு பசுபதி. தொடர்ந்து விரட்டும் வில்லன் எப்படி நல்லவன்
ஆகிறான்? இதுதான் க்ளைமாக்ஸ். இப்படி கொந்தளிக்கிற சீன்களில் கூட
பந்தடிக்கிற லாவகத்தோட சிரிப்பை சிதறடிக்கிறார் டைரக்டர். பேதாததற்கு
வடிவேலு. இவர் வருகிற காட்சிகள் ஒவ்வொன்றும் இடிவிழுந்த மாதிரி
சிரிக்கிறது தியேட்டர் மொத்தமும். காலச்சுவடு,
உண்மை போன்ற சீரியஸ் டைப் புத்தகங்கள் படித்தாலும், வாழ்க்கையை சாராயம்,
குட்டி என்று சந்தோஷமாக கழிக்கிற யதார்த்த மனுஷனாக பசுபதி. தன்னுடன்
படித்த பெண் ஒருத்தி புத்திசுவாதீனமில்லாமல் போய்விட்டாள் என்பது
தெரிந்ததும், அவளை தன்னுடனேயே வைத்துக் காப்பாற்றுவது நெகிழ்ச்சி.
சேச்சின்னு நினைச்சு லாட்ஜுக்கு கூட்டிட்டு போய், சீச்சீன்னு ஆகிற
இடத்திலே பசுபதி பரிதாபம். இனி சூர சம்ஹாரம்தான் என்று வில்லன் வீட்டுக்கே
கிளம்பி போறவரு, அந்த வீட்டு பெரிசு ஒன்றை ஆஸ்பத்திக்கு கூட்டி வந்து,
“பாருய்யா, உயிரோட மதிப்பை” என்று காட்டுவது கைதட்டல் ஏரியா. ஆனால், அந்த
ஐடியாவும் புட்டுக் கொள்ளும்போது அவரது முகம், சொய்ய்ய்ங்.. ஙே என்று அழுதுகொண்டே “நான் வேலைக்கு போக மாட்டேன். கண்ட கண்ட
ரவுடிகளோட இருக்க வேண்டியிருக்கு” என்று அழும் பெண் போலீஸ் கேரக்டர் ரொம்ப
யதார்த்தம். “ஸ்கூலுக்கு போறீயா, இல்லையா?” ரேஞ்சுக்கு இவரது அம்மா
மிரட்டுவது இன்னும் சுவாரஸ்யம். ரொம்ப ரசிச்சு நடிச்சிருக்கார் ஜோதிர்மயி.
அந்த புத்திசுவாதீனமில்லாத பெண்ணுக்குள்ளும் அற்புத நடிப்பு. படம் முழுக்க நம்மை போட்டு குலுக்கி எடுப்பது வடிவேலுதான்.
பிக்பாக்கெட் அடிக்கிறேன் பேர்வழி என்று இன்ஸ்பெக்டர் பாக்கெட்டில்
கையைவிட்டுட்டு எடுக்க முடியாம அவஸ்தை படுறாரே, தியேட்டரே பேயாட்டாம்
ஆடுகிறது சிரிப்பில்! தினாவின் இசையில் எல்லா பாடல்களும் இனிமை. பின்னணி இசையில்தான்
எதை எதையோ உருட்டி இம்சை கொடுக்கிறார் மனுஷன். பாலபரணியின் ஒளிப்பதிவும்
குளிர்ச்சி. நகைச்சுவை படங்களை கையாள்வதற்கு தனி திறமை வேண்டும். அது
மூர்த்திக்கு நிறையவே இருக்கிறது. குடும்பத்தோடு தியேட்டருக்கு போகலாம்.
கொடுத்த காசு செரிக்க செரிக்க சிரித்துவிட்டு வரலாம். |