Friday, 2024-04-19, 2:40 PM
My site
Welcome Guest | RSS
Main | வெல்லப் பூரணம் | Registration | Login
Site menu

Section categories

உலக அதிசங்கள்

வெல்லப் பூரணம்



தேவையான பொருள்கள் :


வெல்லத் தூள் - 3/4 கப்
தேங்காய்த் துருவல் - 1 கப்
ஏலத்தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை : ஒரு மைக்ரோ - ப்ரூஃப் கண்ணாடிப் பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, வெல்லத்தூள் போட்டுக் கலந்து இரண்டு நிமிடங்கள் ஹை பவரில் வைத்து எடுக்க வும். உலோக வடி கட்டியில், கெட்டியாக வடிகட்டிக் கொள்ளவும். பிறகு, தேங்காய்த் துருவல், ஏலத்தூள், வடிகட்டிய வெல்லநீர் மூன்றையும் கலந்து கொள்ளவும். இதை மீடியம் ஹை பவரில் மூன்று நிமிடங்கள் (எல்லாம் சேர்ந்தாற்போல் ஆகும் வரை) வைத்து எடுத்தால் வெல்லப் பூரணம் தயார்.

உளுத்தம் பூரணம்

தேவையான பொருள்கள் :

ஊறவைத்து அரைக்க :
உளுத்தம் பருப்பு : 1/2 கப்
மிளகாய் வற்றல் : 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 சிறிய துண்டு
பெருங்காயம் : 1 சிட்டிகை
உப்பு : தேவையான அளவு

தாளிக்க :

எண்ணெய் : 2 டேபிள் ஸ்பூன்
கடுகு : 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு : 1 டீஸ்பூன்

செய்முறை :

ஊறவைத்து அரைக்கக் கொடுத் திருக்கும் பொருள்களை ஒரு மணி நேரம் ஊற வைத்து (மிகவும் நைஸாக இல்லாமல்) கெட்டியாக மிக்ஸியில் அரைக்கவும்.

ஒரு மைக்ரோ - ப்ரூஃப் ஸ்டீமர் பாத்திரத்தில் நான்கு டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றவும். மைக்ரோ - ப்ரூஃப் இட்லித் தட்டில் சிறிது எண்ணெய் தடவி அரைத்த விழுதை வைத்து மூடி மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் மீடியம் ஹை பவரில் வைக்கவும். பிறகு, வெளியே எடுத்து, சூடு ஆறியவுடன் கட்டியில்லாமல் உதிர்க்க வும்.

ஒரு மைக்ரோ - ப்ரூஃப் கண்ணாடிப் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு, ஹை பவரில் இரண்டு நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உளுத்தம்பருப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் மீடியம் ஹைபவரில் வைத்து, உதிர்த்த கலவையைச் சேர்க்கவும். அவற்றை நன்கு கலந்து ஹை பவரில் மூன்று நிமிடங்கள் வைத்தால், உளுத்தம் பூரணம் தயார்!

பின் குறிப்பு : மாவில் சொப்பு செய்து ஸ்டஃப்பிங் செய்த கொழுக் கட்டைகளை இதே முறையில் மைக்ரோவேவ் அவனில் ஸ்டீமிங் செய்யலாம்.

Tag Board

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

Copyright MyCorp © 2024 Site managed by uCoz